/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லுாரி மாணவர்களை தாக்கிய கும்பலுக்கு வலை
/
கல்லுாரி மாணவர்களை தாக்கிய கும்பலுக்கு வலை
ADDED : டிச 23, 2024 07:02 AM
போத்தனுார்; கோவை, தனியார் கல்லுாரியில் நீலகிரி மாவட்டம், தேவாலாவை சேர்ந்த, 18 வயது மாணவர், பிள்ளையார்புரத்தில் தங்கி படித்து வருகிறார். இவருக்கு பரத் என்பவருடன் முன்விரோதம் ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த, 20ல் பரத் தனது நண்பர்களான சரண், உதயா, வெங்கடேஷ், கவுதம், ராஜராஜன், முஹமது மற்றும் சிலருடன், மாணவரின் அறைக்கு வந்தார். அங்கு மாணவர் மற்றும் உடனிருந்தோரை தாக்கியும், கத்தியால் குத்தியும் காயமேற்படுத்தினர். அங்கிருந்த மூன்று லேப்டாப்கள், நான்கு மொபைல் போன்கள், ரொக்கம் ஐந்தாயிரம் ரூபாய் ஆகியவற்றை எடுத்தனர்.
தொடர்ந்து அனைவரையும், குனியமுத்துார் பகுதியிலுள்ள ஒரு அறைக்கு கூட்டிச் சென்று தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து தப்பினர். காயமடைந்தோர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றனர். மாணவரின் புகாரில், சுந்தராபுரம் போலீசார் பரத் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து தேடுகின்றனர்.