/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆறு பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
/
ஆறு பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
ADDED : ஏப் 17, 2025 11:50 PM
கோவை; வழிப்பறி, புகையிலை, கஞ்சா விற்பனை, காயம் ஏற்படுத்துதலில் ஈடுபட்ட ஆறு பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கீரணந்தம், சஹாரா சிட்டி ரோட்டில், துடியலுாரை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவரிடம், கத்தியை காட்டி மிரட்டி, மோதிரத்தை பறித்த கோவை கணபதி, சங்கனுார் மெயின் ரோடு, காமராஜபுரத்தை சேர்ந்த அருள்முருகன், 22, திவாகா, 23, கவுதம், 23 ஆகிய மூவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
இதேபோல், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு காட்டூர் போலீசாரால் சிறையில் அடைக்கப்பட்ட துாத்துக்குடி வீரபாண்டியன் பட்டணத்தை சேர்ந்த ராபீன் பிரதீப், 26 மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. உக்கடம் சி.எம்.சி., காலனியை சேர்ந்த மொய்தீன் என்பவரை தாக்கிய தெற்கு உக்கடம் துப்புரவாளர் காலனியை சேர்ந்த ராஜேஷ், 40 என்பவரை உக்கடம் போலீசார் சிறையில் அடைத்தனர்.
இதேபோல், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட கோவை வரதராஜபுரம், காமராஜர் ரோட்டை சேர்ந்த ரசீது, 46 என்பவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
இவர்கள் ஆறு பேர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் ஆறு பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆறு பேரிடமும் இதுகுறித்த ஆணை வழங்கப்பட்டது.

