/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கஞ்சா வியாபாரிகள் கைது; 2 கிலோ கஞ்சா பறிமுதல்
/
கஞ்சா வியாபாரிகள் கைது; 2 கிலோ கஞ்சா பறிமுதல்
ADDED : ஜூன் 26, 2025 12:26 AM
கோவை; கஞ்சா வியாபாரிகள் ஐந்து பேரை, போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து இரண்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மாநகர பகுதிகளில் கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்க, கஞ்சா வியாபாரிகளின் வீடுகளில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, காட்டூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியான சத்தி ரோடு பாலம் அருகில் நின்றிருந்த, திண்டுக்கலை சேர்ந்த விக்ரம், 40 மற்றும் கோவை தெலுங்குபாளைத்தை சேர்ந்த ரவி, 62 ஆகியோரை பிடித்து சோதனை செய்தனர்.
அவர்களிடம், 1.6 கிலோ கஞ்சா இருந்தது. இருசக்கர வாகனம், மொபைல், ரூ. 4800 பணம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
* துடியலுார் போலீசார் வட்டமலைபாளையம் பகுதியில் உள்ள, அசாம் மாநிலத்தை சேர்ந்த ஆகாஷ், 22 என்பவரிடம் சோதனை செய்ததில், 100 கிராம் கஞ்சா சிக்கியது.
* பீளமேடு பகுதியில் உள்ள டைடல் பார்க் சாலையில், கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, இருவர் கஞ்சா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த சரவணம்பட்டியை சேர்ந்த ஆதித்யன், 21, விக்னேஷ், 34 ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சா, 20 'ஜிப் லாக் கவர்' ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட விக்ரம், ரவி, ஆகாஷ் ஆகியோரை போலீசார் சிறையில் அடைத்தனர். ஆதித்யன், விக்னேஷ் ஆகியோர் வசிக்கும் இடங்களில் சோதனை மேற்கொண்டு அவர்களிடம் விசாரிக்கின்றனர்.