ADDED : பிப் 11, 2026 05:38 AM

அ நிறம் | அளவு
சூலூர்: சுல்தான்பேட்டை அடுத்த சித்தநாயக்கன் பாளையத்தில், கஞ்சா விற்பதாக சுல்தான்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற போலீசார், சந்தேகத்துக்கு இடமான வகையில் சென்ற நபர்களை பிடித்து விசாரித்தனர். சூலூரை சேர்ந்த கண்ணன், 27, முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.
அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில், 1 கிலோ, 100 கிராம் கஞ்சா பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதை பறிமுதல் செய்த போலீசார், கண்ணனை கைது செய்தனர்.
