ADDED : மார் 06, 2026 05:20 AM

அ நிறம் | அளவு
கருமத்தம்பட்டி: கருமத்தம்பட்டி அருகே கஞ்சா விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
கருமத்தம்பட்டி போலீசார், அரசு போக்குவரத்து கழக டிப்போ அருகில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து சோதனையிட்டனர்.
அவர் வைத்திருந்த பையில், 2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்நபர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஹரிச்சந்திர சன்யாசி, 29 என்பதும், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் உள்ள மில்லில் வேலை செய்து வந்ததும் தெரிந்தது. போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
