/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அள்ளாத குப்பை...அகற்றாத புதர்...வீணாகும் குடிநீர்! மாநகராட்சி நிர்வாகம் ஆழ்ந்த 'கொர்'
/
அள்ளாத குப்பை...அகற்றாத புதர்...வீணாகும் குடிநீர்! மாநகராட்சி நிர்வாகம் ஆழ்ந்த 'கொர்'
அள்ளாத குப்பை...அகற்றாத புதர்...வீணாகும் குடிநீர்! மாநகராட்சி நிர்வாகம் ஆழ்ந்த 'கொர்'
அள்ளாத குப்பை...அகற்றாத புதர்...வீணாகும் குடிநீர்! மாநகராட்சி நிர்வாகம் ஆழ்ந்த 'கொர்'
ADDED : பிப் 16, 2025 11:57 PM

மேம்பாலத்தில் சேதம்
ரத்தினபுரி, சங்கனுார் மேம்பாலத்தின் ஒரு பகுதி மோசமாக சேதமடைந்துள்ளது. கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இரவு நேரங்களில், இருசக்கர வாகனத்தில் வருவோர் விபத்தில் சிக்குகின்றனர். கம்பிகளால் வாகனங்களின் டயர்களும் சேதமடைகின்றன.
- ராஜா, சங்கனுார்.
தார் சாலை வேண்டும்
பொம்மனாம்பாளையம், பாலாஜி நகரில், தார் சாலை அமைக்க பல ஆண்டுகளாக வலியுறுத்தியும் நடவடிக்கையில்லை. மழைக்காலங்களில் மண் சாலையில், தண்ணீர் தேங்கி பயன்படுத்த முடியாத அளவிற்கு சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது.
- விஜய், பாலாஜி நகர்.
புதர்மண்டிய குளம்
குறிச்சி குளம்,திருவள்ளுவர் சிலையை சுற்றிலும் புதர்மண்டி கிடக்கிறது. சிலர் குளத்தில் குப்பையையும் வீசிச்செல்கின்றனர். பல வாரங்களாகதேங்கியுள்ள கழிவுகளால் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. புதர்களை அகற்றுவதுடன், குப்பை கொட்டாமல் இருக்க நடவடிக்கை வேண்டும்.
- தங்கவேல், சுந்தராபுரம்.
மண்ணில் புதையும்சக்கரங்கள்
மதுக்கரை ரோடு, நடராஜ் மருத்துவனை அடுத்து இருக்கும் மேம்பாலத்தின் இருபகுதிகளிலும் அதிக மணல் குவிந்துள்ளது. சாலையோரம் செல்லும் போது, இருசக்கர வாகனங்களின் சக்கரங்கள் மண்ணில் புதைகிறது. வாகன ஓட்டிகள் விபத்திலும் சிக்குகின்றனர்.
- சிந்தாமணி, மதுக்கரை.
குவியும் குப்பை
உடையாம்பாளையம் ரோடு, 50வது வார்டு, ராஜேஸ்வரி நகரில் சாலையோரம் பெருமளவு குப்பை குவிந்துள்ளது. இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. குப்பையை அகற்றச் சொல்லி, பல முறை புகார் செய்தும் நடவடிக்கையில்லை.
- தேவ்தாஸ், ராஜேஸ்வரி நகர்.
சாக்கடைக்குள் குடிநீர் குழாய்
அன்னுார், கொண்டையம்பாளையம், வரதயங்கார்பாளையம், நால்ரோடு சந்திப்பில், குடிநீருக்கான குழாய்கள் சாக்கடை கால்வாய் வழியாக செல்கிறது. சாக்கடை நீரில் குடிநீர் கலக்கும் அபாயம் உள்ளது. அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கையில்லை.
- பூபதி, அன்னுார்.
தடுமாறும் வாகனங்கள்
ஒண்டிப்புதுார், 57வது வார்டு, எஸ்.எம்.எஸ்., லே-அவுட், இரண்டாவது வீதியில், பாதாள சாக்கடைக்காக கட்டப்பட்ட சிறிய பாலம், சாலையை விட ஒரு அடி உயரமாக இருக்கிறது. இருபுறமும் சாய்வு அமைக்கப்படாததால், வாகனங்கள் ஏறி, இறங்க சிரமமாக உள்ளது. மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாகனத்தை, இப்பகுதியில் கொண்டுசெல்லவே முடியவில்லை.
- பழனிசாமி, ஒண்டிபுதுார்.
பெரிய பள்ளங்கள்
பீளமேடு ரயில்நிலையத்திற்கு மேலே அமைந்துள்ள மேம்பாலம் அருகே, மூன்று ரோடுகள் சந்திக்கும் பகுதியில், பல இடங்களில் தார் பெயர்ந்து பெரும் பள்ளங்கள் காணப்படுகின்றன. மோசமான சாலையால் காலை, மாலை வேளையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
- கார்த்திக், பீளமேடு.
சுகாதாரசீர்கேட்டால் காய்ச்சல்
சுங்கம் காமாட்சி அம்மன் கோவில் தெருவின் கடைசி பகுதியில், ரூபா நகர் மற்றும்முனுசாமி நகரையும் இணைக்கும் பாதையில், சாலையோரத்தில் பெருமளவு குப்பை குவிந்துள்ளது. சுகாதார சீர்கேட்டால் இப்பகுதியில், குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது.
- முனுசாமி, சுங்கம்.