/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குப்பை, கழிவு நீரால் சுகாதாரம் பாதிப்பு
/
குப்பை, கழிவு நீரால் சுகாதாரம் பாதிப்பு
ADDED : ஜன 16, 2025 05:59 AM

கிணத்துக்கடவு கிணத்துக்கடவு, கோவிந்தபுரம் --- சூலக்கல் ரோட்டில் குப்பையும், கழிவு நீருமாக இருப்பதால் வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர்.
கிணத்துக்கடவு, கோவிந்தபுரம் --- சூலக்கல் ரோடு வழியாக, தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. இதில், கோவிந்தபுரம் பகுதியில் குடியிருப்புகள் அருகே ரோட்டோரத்தில் அதிக அளவு குப்பை கொட்டி எரிகின்றனர்.
அப்பகுதியில் ஏற்படும் புகையால், அவ்வழியில் செல்லும் வாகன ஓட்டுனர்கள் பாதிக்கப்படுகின்றனர். அங்கு துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரமும் பாதிக்கப்படுகிறது. இது மட்டுமின்றி, இப்பகுதிக்கு அருகில் கால்வாய் வழிந்து, ரோட்டில் கழவுநீர் செல்கிறது. நோய் தொற்று அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, இப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி, ஊராட்சி நிர்வாகம் குப்பை கொட்டும் இடத்தை மாற்றும் செய்து, ரோட்டில் கழிவு நீர் தேங்குவதை தடுக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்துகின்றனர்.