/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேய்ச்சல் பகுதிகளில் குப்பை எரிப்பு
/
மேய்ச்சல் பகுதிகளில் குப்பை எரிப்பு
ADDED : செப் 15, 2025 09:33 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, இம்மிடிபாளையம் செல்லும் வழித்தடத்தில், ரயில்வே பாதை அருகே குப்பை குவித்து எரிப்பதால், கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதில் சிரமம் ஏற்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
கிணத்துக்கடவு மயானம் வழியாக, தேவராடிபாளையம், இம்மிடிபாளையம் செல்லும் ரோட்டில் ஏராளமான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் செல்கின்றனர். இந்த ரோட்டில் ரயில்வே தண்டவாளம் உள்ளது.
இதன் அருகே, அதிகளவு செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. இப்பகுதியில் விவசாயிகள் பலர் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுகின்றனர். ஆனால், கடந்த சில நாட்களாக இப்பகுதிகளில் குப்பை கொட்டுவது அதிகரித்துள்ளது.
மேலும், அதிகளவு பேப்பர் மற்றும் பிளாஸ்டிக் குப்பையை குவித்து எரிக்கின்றனர். இதை கால்நடைகள் புட்களுடன் சேர்த்து உட்கொள்ளும் போது பாதிப்பு ஏற்படும். எனவே, இப்பகுதியில் குப்பை கொட்டுவதையும், எரிப்பதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.