/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பவானி ஆற்றில் கொட்டப்படும் குப்பைகள்
/
பவானி ஆற்றில் கொட்டப்படும் குப்பைகள்
ADDED : மார் 19, 2024 10:33 PM

மேட்டுப்பாளையம்;பவானி ஆற்றங்கரையில் கொட்டப்படும் குப்பைகள் மற்றும் கழிவு துணிகளால், பவானி ஆற்றில் மாசு ஏற்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் சுப்ரமணிய சுவாமி கோவில் அருகே பவானி ஆறு செல்கிறது. கோடை காலம் நெருங்கி வரும் நிலையில் பவானி ஆறு வறண்டு, நீர் வரத்து மிகவும் குறைந்துள்ளது.
இதனால் ஆற்றங்கரையில் உள்ள காலி இடங்களில் மர்ம நபர்கள் குப்பைகள், கழிவு துணிகளை யாருக்கும் தெரியாமல் கொட்டிவிட்டு செல்கின்றனர்.
இதனை தடுக்க மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில், சுப்ரமணிய சுவாமி கோவில் அருகே பவானி ஆறுக்கு செல்லும் வழியில் கேட் அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், யாரும் இல்லாத நேரத்தில் கேட்டிற்குள் புகுந்து, குப்பைகளை மர்ம நபர்கள் கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால் பவானி ஆற்றங்கரையில் மாசு ஏற்பட்டுள்ளது.
நீர் வரத்து அதிகரிக்கும் போது, இந்த குப்பைகளும், கழிவு துணிகளும் நேரடியாக ஆற்றில் கலந்து, நீர் மாசு ஏற்படும். இதனை தடுக்க நகராட்சியால் அமைக்கப்பட்டுள்ள கேட்டிற்கு பூட்டு போட வேண்டும்.
செக்யூரிட்டி ஒருவர் நியமிக்க வேண்டும். கண்காணிப்பு கேமரா பொருத்தி, குப்பைகளை கொட்டி செல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.---

