/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குட்டையில் கொட்டப்படும் குப்பை; நோய்கள் பரவுவதாக மக்கள் புகார்
/
குட்டையில் கொட்டப்படும் குப்பை; நோய்கள் பரவுவதாக மக்கள் புகார்
குட்டையில் கொட்டப்படும் குப்பை; நோய்கள் பரவுவதாக மக்கள் புகார்
குட்டையில் கொட்டப்படும் குப்பை; நோய்கள் பரவுவதாக மக்கள் புகார்
ADDED : செப் 25, 2024 08:46 PM
சூலுார் : ஊத்துப்பாளையத்தில் குட்டையில் குப்பை கொட்டுவதால், நோய் பரவுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சூலுார் ஒன்றியம் அரசூர் ஊராட்சிக்குட்பட்ட ஊத்துப்பாளையம் கிராமம்.
இங்குள்ள வண்ணார் குட்டையில் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை கொட்டப்படுகிறது. இதனால், நோய்கள் பரவுவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து தன்னார்வலர் முருகேசன் மற்றும் அப்பகுதி மக்கள் கூறியதாவது:
அரசூர் ஊராட்சிக்குட்பட்ட ஊத்துப்பாளையம் வண்ணார் குட்டையில் ஊராட்சி நிர்வாகமே குப்பை கொட்டுகிறது. மேலும், இரவு நேரத்தில் இறைச்சி கழிவுகள் உள்ளிட்ட பல வகையான கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால், பல அடி உயரத்துக்கு குப்பை குவிந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. நாய்கள் குப்பையை கிளறுகின்றன. ஈக்கள் மொய்க்கின்றன. அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு ஈக்கள் படையெடுக்கின்றன. அருகிலேயே அங்கன்வாடி உள்ளது. இதனால், குழந்தைகள் பாதிப்புக்கு உள்ளாகினர். இதனால், பள்ளி செயல்படுவதில்லை. கலெக்டர், தாசில்தார், பி.டி.ஓ., உள்ளிட்ட பல அதிகாரிகளிடம் பலமுறை புகார்கள் தெரிவித்தும் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. குப்பை கொட்டுவதையும் நிறுத்தவில்லை. உடனடியாக தீர்வு காணாவிட்டால், தொடர் போராட்டம் நடத்தும் முடிவில் உள்ளோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

