குட்டையில் குப்பைக்கு தீ: நீர்நிலை மாசுபடும் அவலம்
குட்டையில் குப்பைக்கு தீ: நீர்நிலை மாசுபடும் அவலம்
UPDATED : மே 10, 2026 03:37 PM
ADDED : மே 10, 2026 02:30 PM

அ நிறம் | அளவு
நெகமம்: நெகமம் ரோட்டின் ஓரத்தில் உள்ள குட்டையில், குப்பைக்கு தீ வைப்பதால் தண்ணீர் மாசுபடுகிறது.
வடசித்தூரில் இருந்து நெகமம் செல்லும் ரோட்டில், செட்டிபுதூர் அருகே ரோட்டின் ஓரத்தில் உள்ள குட்டையில் தண்ணீர் தேக்கி உள்ளது. அங்கு அவ்வப்போது குப்பை கொட்டி எரிப்பது வழக்கமாக உள்ளது.
ஆனால், கடந்த சில தினங்களாக, தண்ணீர் நிற்கும் பகுதியில் குப்பையை குவியாலாக கொட்டி தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் புகை மூட்டத்தால், ரோட்டில் செல்லும் வாகனம் ஓட்டுநர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.
இதனால், குட்டையில் உள்ள தண்ணீர் மாசுபடுவதுடன், அருகில் உள்ள விளைநிலமும் பாதிக்கிறது. எனவே, குட்டையில் குப்பை கொட்டப்படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.
