தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குப்பைக்கு தீ; பொதுமக்கள் அவதி

 குப்பைக்கு தீ; பொதுமக்கள் அவதி

 குப்பைக்கு தீ; பொதுமக்கள் அவதி


ADDED : பிப் 27, 2026 05:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2026 05:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: -: மேட்டுப்பாளையம் பவானி ஆறு மேம்பாலம் அருகில், குப்பைக்கு தீ வைத்ததால், புகையால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

மேட்டுப்பாளையம் பவானி ஆறு மேம்பாலம் அருகில், கோத்தகிரி சாலை பிரியும் பகுதியில், மர்ம நபர்கள் சிலர், குப்பையை கொட்டி தீ வைப்பது வாடிக்கையாக உள்ளது. நேற்று காலை, குப்பையை கொட்டி மர்ம நபர்கள் தீ வைத்தனர். மேம்பாலம் மற்றும் அதன் அருகில் ஊட்டி சாலை உட்பட பகுதிகளில் கரும்புகை சூழ்ந்தது.

சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டி தீ வைப்பவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us