/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குப்பையில்லா கோவை மாணவர்களுக்கு போட்டிகள்
/
குப்பையில்லா கோவை மாணவர்களுக்கு போட்டிகள்
ADDED : செப் 27, 2024 10:55 PM

மேட்டுப்பாளையம்: குப்பையில்லா கோவையை உருவாக்குவது, துாய்மையே சேவை பணி என்ற, தலைப்புகளில் காரமடை அருகே, பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடந்தன.
காரமடை அடுத்த மருதுார் ஊராட்சிக்கு உட்பட்ட கா. புங்கம்பாளையம் அரசு துவக்கப்பள்ளியில், குப்பையில்லா கோவை, துாய்மை பாரத இயக்கத்தின் துாய்மையே சேவை என்ற கருப்பொருளின் கீழ், மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடந்தன. மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கவிதை, கட்டுரை, ஓவியம் ஆகிய போட்டிகள் நடந்தன.
இதில் பேச்சு போட்டியில் தாமரைக்கண்ணன் முதலிடம், தவனேஷ் இரண்டாமிடம், ஹரிசித் மூன்றாமிடம் பெற்றனர். கட்டுரை போட்டியில் விஜயராகவன் முதலிடம், ஜோன்ராஜ் இரண்டாமிடம், ரோகித் மூன்றாமிடம் பெற்றனர்.
ஓவிய போட்டியில் தாமரைச்செல்வன் முதலிடம், ஆர்யா இரண்டாமிடம், கோபாலகிருஷ்ணன் மூன்றாமிடம் பெற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மருதுார் ஊராட்சி தலைவர் பூர்ணிமா ரங்கராஜன் பரிசுகளை வழங்கினார். விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் விநாயகம் வரவேற்றார். வார்டு உறுப்பினர்கள், மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.