/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'குப்பை இல்லா கோவை' திட்டம்; கோவை புறநகர் பகுதியில் அறிமுகம்
/
'குப்பை இல்லா கோவை' திட்டம்; கோவை புறநகர் பகுதியில் அறிமுகம்
'குப்பை இல்லா கோவை' திட்டம்; கோவை புறநகர் பகுதியில் அறிமுகம்
'குப்பை இல்லா கோவை' திட்டம்; கோவை புறநகர் பகுதியில் அறிமுகம்
ADDED : ஜூன் 05, 2025 01:16 AM
கோவை; கோவை புறநகர் பகுதியில், பிளாஸ்டிக் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஊரக பகுதியில், 60 லட்ச ரூபாய் மதிப்பில், குப்பை இல்லா கோவை திட்டத்தை செயல்படுத்த, கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமை, முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, மாவட்ட கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சங்கேத் பல்வந்த் வாகே கூறியதாவது:-
மருதமலையை ஒட்டிய சோமையம்பாளையம் ஊராட்சிப்பகுதியில், வனத்தை ஒட்டி குப்பைக்கழிவுகள் ஏராளமாக கொட்டப்படுகின்றன.
அதை சரிசெய்யும் வகையிலும் கோவை புறநகர் பகுதியில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் பிளாஸ்டிக் பொருட்கள் கழிவுகளால் வரும் பிரச்னையை தீர்க்கவும், ரூ.60 லட்சத்தில் குப்பை இல்லா கோவை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி, சோமையம்பாளையம் உள்ளிட்ட மூன்று இடங்களில், குப்பை மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அத்திட்டத்தின் படி, ஊரக பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு. மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கப்படும். அவை வேளாண் விவசாயப்பணிகளுக்கு விற்பனை செய்யப்படும்.
ஊரக பகுதிகளில் சேகரமாகும் பிளாஸ்டிக் பொருட்கள், சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும். ஒரு சில இடங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தி, சாலை அமைக்கப்படுகிறது.
இதில் 8 சதவீதத்துக்கு, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த முடியும். இதன்மூலம் பிளாஸ்டிக் பொருட்கள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.