/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகராட்சி எல்லையில் குப்பை குவிப்பு; வாகன ஓட்டுநர்கள் பாதிப்பு
/
நகராட்சி எல்லையில் குப்பை குவிப்பு; வாகன ஓட்டுநர்கள் பாதிப்பு
நகராட்சி எல்லையில் குப்பை குவிப்பு; வாகன ஓட்டுநர்கள் பாதிப்பு
நகராட்சி எல்லையில் குப்பை குவிப்பு; வாகன ஓட்டுநர்கள் பாதிப்பு
ADDED : டிச 29, 2024 11:36 PM

குப்பையால் பாதிப்பு
பொள்ளாச்சி, ஆச்சிபட்டி ஊராட்சி, அம்மா திருமண மண்டபம் முன், நகராட்சி எல்லையில் அதிகளவு குப்பை கொட்டப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியில் பயணிக்கும் வாகன ஓட்டுநர்களுக்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதை ஊராட்சி நிர்வாகத்தினர் கவனித்து உடனடியாக இங்குள்ள குப்பையை அகற்றம் செய்ய வேண்டும்.
-- டேவிட், பொள்ளாச்சி.
மின் கம்பம் சேதம்
நல்லட்டிபாளையம் ஊராட்சி வீரமாச்சி அம்மன் கோவில் அருகே உள்ள மின்கம்பங்கள், கான்கிரீட் பூச்சு சேதமடைந்து இரும்புக்கம்பிகள் வெளியே தெரியும் படி உள்ளது. இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே சாயும் நிலையில் இருப்பதால், மின்துறை அலுவலர்கள் உடனடியாக புதிய கம்பம் அமைக்க வேண்டும்.
- நஞ்சுண்டசாமி, நல்லட்டிபாளையம்.
குப்பை கொட்டாதீங்க!
பொள்ளாச்சி, சந்தேககவுண்டம்பாளையத்தில் இருந்து குள்ளிச்செட்டிபாளையம் செல்லம் ரோட்டின் ஓரத்தில் அதிகளவு குப்பை கொட்டப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியில் பயணிப்பவர்கள் கடும் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர். குப்பையை, உடனடியாக அகற்றம் செய்ய வேண்டும்.
- மணி, சந்தேகவுண்டம்பாளையம்.
கேமரா அமைக்கணும்!
பொள்ளாச்சி -- கோவை தேசிய நெடுஞ்சாலையில், 'யூ டர்ன்' பகுதி மற்றும் சர்வீஸ் ரோடு பிரியும் இடங்களில் கண்காணிப்பு கேமரா இல்லாததால், விபத்து நடப்பதை கண்காணிக்க கடினமாக உள்ளது. எனவே இப்பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
- வேலு, கிணத்துக்கடவு.
வீணாகும் குடிநீர்
உடுமலை-பழநிரோடு, ஐஸ்வர்யா நகர் திரும்பும் பகுதியில் குடிநீர் குழாய் சிதிலமடைந்துள்ளது. இதனால் குழாயிலிருந்து குடிநீர் வீணாகி ரோட்டில் வழிந்தோடுகிறது. ரோட்டில் தண்ணீர் தேங்குவதால் அவ்வழியாக செல்வோரும் அவதிப்படுகின்றனர். நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
-செல்வம், உடுமலை.
சேதமடைந்த ரோடு
பொள்ளாச்சி, தேர்முட்டி முதல் ஊஞ்சவேலம்பட்டி வரை உள்ள ரோடு மிகவும் மோசமாக உள்ளது. இதில் பயணிக்கும் வாகன ஓட்டுநர்கள் தடுமாறிச்செல்கின்றனர். குறிப்பாக, பைக் ஓட்டுநர்கள் இரவு நேரத்தில் செல்ல சிரமப்படுகின்றனர். இதை அரசு அதிகாரிகள் கவனித்து உடனடியாக ரோட்டை சீரமைக்க வேண்டும்.
- விஸ்வநாதன், பொள்ளாச்சி.
பூட்டிக்கிடக்கும் ரேஷன்கடை
சின்னவீரம்பட்டி, இந்திராநகர் பகுதி ரேஷன் கடை சரியாக செயல்படுவதில்லை. ரேஷன் கடையில் அடிக்கடி ஆட்கள் இல்லாமலும், பூட்டிய நிலையில் இருப்பதால் அப்பகுதி மக்கள் அங்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்ப செல்கின்றனர்.
- ராணி, இந்திராநகர்.
நடைபாதை ஆக்கிரமிப்பு
உடுமலை, பசுபதி வீதியில் ரோட்டோர நடைபாதை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. பொதுமக்கள் அவ்வழியாக நடப்பதற்கு வழியில்லாமல் வாகனங்களின் நடுவே செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் அடிக்கடி இடையூறு ஏற்படுகிறது. வாகன ஓட்டுநர்களும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் செல்வதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
- தம்பிதுரை, உடுமலை.
சிதிலமடைந்த ரோடு
போடிபட்டி சுண்டக்காம்பாளையம் பகுதியில் ரோடு குண்டும் குழியுமாக சிதிலமடைந்துள்ளது. மழை நாட்களில் மழைநீர் முழுவதும் தேங்கி மக்களுக்கு பெரிதும் இன்னலை ஏற்படுத்துகிறது. வாகனங்கள் அவ்வழியாக செல்ல முடியாமல் அடிக்கடி பழுதடைந்துவிடுகின்றன. ரோட்டை சீரமைப்பதற்கு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- முத்துக்குமார், சுண்டக்காம்பாளையம்.
பழைய கட்டடம்
உடுமலை பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில், பழைய கட்டடம் இடிக்கப்படாமல் உள்ளது. இதனால், அப்பகுதியில் பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, நகராட்சி அதிகாரிகள் பழைய கட்டடத்தை அகற்ற நடவடிக்கை வேண்டும்.
- முருகன், உடுமலை.

