/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீரோடையில் குப்பை குவிப்பு: கண்டுகொள்ளாத உள்ளாட்சி நிர்வாகம்
/
நீரோடையில் குப்பை குவிப்பு: கண்டுகொள்ளாத உள்ளாட்சி நிர்வாகம்
நீரோடையில் குப்பை குவிப்பு: கண்டுகொள்ளாத உள்ளாட்சி நிர்வாகம்
நீரோடையில் குப்பை குவிப்பு: கண்டுகொள்ளாத உள்ளாட்சி நிர்வாகம்
ADDED : ஜூலை 24, 2025 08:26 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, நல்லட்டிபாளையம் செல்லும் ரோட்டோரம் கொட்டப்பட்ட குப்பை தற்போது நீரோடையில் தள்ளப்பட்டுள்ளது.
கிணத்துக்கடவு, கோடங்கிபாளையாம் ஊராட்சிக்கு உட்பட்ட நல்லட்டிபாளையம் செல்லும் ரோட்டில், தனியார் நிறுவனத்துக்கு தொழிலாளர்கள் அதிகளவில் பயணிக்கின்றனர். ரோட்டின் அருகே நீரோடை அமைந்துள்ளது. ஓடையின் ஓரத்தில் தனியார் நிறுவனத்தின் பிளாஸ்டிக் கழிவு மலை போல் குவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து குப்பை குவியலை அகற்றக்கோரி உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், குப்பையை அகற்றாமல், ரோட்டோரத்தில் இருந்து, நீரோடையில் தள்ளப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் மாசுபடுவடுடன், பொதுச்சுகாதாரம் பாதிக்கப்படுகிறது.
இதை ஊராட்சி நிர்வாகத்தினர் கவனித்து நீரோடையில் கொட்டிய கழிவை அகற்றம் செய்து, குப்பை கொட்டிய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தப்படுகிறது.
மக்கள் கூறியதாவது:
தினமும் இவ்வழியாக பணியாளர்கள் அதிகளவில் சென்று வருகின்றனர். இதுமட்டுமின்றி விவசாயிகள் பலர் கால்நடைகளை இப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு விடுகின்றனர். இந்நிலையில், நீரோடையில் குப்பை கொட்டப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
ஆடு, மாடு இந்த குப்பையை சாப்பிட்டால் பாதிப்பு ஏற்படும். எனவே, இப்பகுதியில் கொட்டப்பட்ட குப்பையை அகற்றிய பின், குப்பை கொட்டக்கூடாது என ஊராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வைக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'குப்பையை அகற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால், நீரோடையில் குப்பை கொட்டப்பட்டுள்ளது தெரியவில்லை. இங்கு குப்பை கொட்டியவர்கள் மீது விரைவில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.