/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீயில் கருகி சேதமான தோட்டத்து சாளை
/
தீயில் கருகி சேதமான தோட்டத்து சாளை
ADDED : ஏப் 06, 2025 09:51 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, சொக்கனூர் பகுதியில் உள்ள தோட்டத்து சாளை தீயில் கருகி சேதம் ஆனது.
கிணத்துக்கடவு, சொக்கனூர் பண்ணாரி அம்மன் கோவில் அருகே, கிருஷ்ணசாமி, 75 என்பவருக்கு சொந்தமான விளை நிலம் உள்ளது.
இவரது காட்டுக்கு அருகாமையில் உள்ள விவசாயி, குப்பைக்கு தீ வைத்த போது காற்றுக்கு தீ பொறி கிருஷ்ணசாமி நிலத்தின் மீது பட்டதில், காய்ந்த புற்கள் முழுதும் தீயில் எரிந்து கருகியது. மேலும், இங்கிருந்த தோட்டத்துச் சாலையில் தீப்பிடித்து முழுவதும் எரிந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த சாலையில் யாரும் இல்லாததால் தீக்காயங்கள் மற்றும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
இதைக் கண்ட அருகில் இருந்த விவசாயிகள், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்களே தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

