
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செய்முறை :
கடாய் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காய வையுங்கள். பின் மிதமான தீ வைத்து காய்ந்த மிளகாய் போட்டு வதக்க வேண்டும். கருகாமல் வதக்கி எடுக்க வேண்டும்.
பின் மிளகாய்களை எடுத்துவிட்டு பூண்டு சேர்த்து வதக்குங்கள். அதோடு இஞ்சியும் சேர்த்துக்கொள்ளுங்கள். பூண்டு பொன்னிறமாக வரும் வரை வதக்க வேண்டும். அனைத்தையும் நன்கு வதக்கியதும் அடுப்பை அணைத்துவிட்டு ஆற வையுங்கள்.
இப்போது மிக்சியில் காய்ந்த மிளகாயை முதலில் அரைத்துக் கொள்ளுங்கள்.பின் பூண்டு சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள். அவ்வளவுதான் பூண்டு தொக்கு தயார். இதை ஒரு டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ளுங்கள்.
தேவைப்படும்போது எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து இந்த தொக்கை போதுமான அளவு சேர்த்து பிரட்டி சாப்பிடலாம்.

