/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கருடாழ்வார் தீர்த்தம் தெப்பக்குளம் சுத்திகரிப்பு
/
கருடாழ்வார் தீர்த்தம் தெப்பக்குளம் சுத்திகரிப்பு
ADDED : டிச 09, 2024 06:29 AM

காரமட: காரமடையில் பிரசித்தி பெற்ற அரங்கநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமானது காரமடை தெப்பக்குளம்.
இந்த தெப்பக்குளத்தை, 'கருடாழ்வார் தீர்த்தம்' என, மக்கள் அழைக்கின்றனர். முடி காணிக்கை செலுத்திவிட்டு பக்தர்கள் இந்த குளத்தில் நீராடுவர். இங்கு நீராடினால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
சமீபத்தில், தெப்பக்குளத்தில் மீன்கள் செத்து மிதந்தன. இதனால் தெப்பக்குளம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் துர்நாற்றம் வீசியது. மேலும், முடி காணிக்கை செலுத்தும் பக்தர்கள், புனித நீரை பயன்படுத்த முடியாமல் அவதியடைந்தனர்.
இதையடுத்து, தற்போது தெப்பக்குளத்தில் உள்ள தண்ணீர் மோட்டார் வாயிலாக உறிஞ்சப்பட்டு, அங்கேயே சுத்திகரிப்பு செய்து, மீண்டும் தெப்பக்குளத்தில் விடப்படுகிறது. இறந்த மீன்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டதால், துர்நாற்றம் வீசுவது குறைந்துள்ளது. தற்போது பக்தர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.