/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.1.54 கோடியில் எரிவாயு தகன மேடை கிணத்துக்கடவு மயானத்தில் அமைப்பு
/
ரூ.1.54 கோடியில் எரிவாயு தகன மேடை கிணத்துக்கடவு மயானத்தில் அமைப்பு
ரூ.1.54 கோடியில் எரிவாயு தகன மேடை கிணத்துக்கடவு மயானத்தில் அமைப்பு
ரூ.1.54 கோடியில் எரிவாயு தகன மேடை கிணத்துக்கடவு மயானத்தில் அமைப்பு
ADDED : பிப் 13, 2025 09:33 PM

கிணத்துக்கடவு, ; கிணத்துக்கடவு மயானத்தில், ரூ.1.54 கோடி மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி நடக்கிறது.
கிணத்துக்கடவு பேரூராட்சி மற்றும் சுற்றுவட்டார ஊராட்சிகளில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதிகளில் இறப்போரை அடக்கம் செய்ய, அந்தந்த ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் மயான வசதி உள்ளது.
இதில் சிலர், இறந்தவரின் உடலை எரியூட்டுகின்றனர். ஆனால், கிணத்துக்கடவு பகுதியில் மின்மயானம் இல்லாததால், பொள்ளாச்சியில் உள்ள மின்மயானத்துக்கு உடலை எடுத்து செல்கின்றனர்.
இந்நிலையில், கிணத்துக்கடவு பகுதியில் புதிதாக நவீன எரிவாயு தகன மேடை அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர். இதை தொடர்ந்து, கிணத்துக்கடவு மயானம் பகுதியில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில், 1.54 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி நடக்கிறது.
அ.தி.மு.க., கவுன்சிலர் லட்சுமண சிங் கூறியதாவது:
கிணத்துக்கடவு பகுதியில் புதிதாக நவீன எரிவாயு தகன மேடை அமைப்பது வரவேற்கும் விதமாக உள்ளது. ஆனால், இப்பகுதியில் இறந்தவர்களின் சடலத்தை புதைப்பதே அதிகம். அதற்கு உரிய இடம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என, மன்றக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது, 70 சதவிகித இடத்தில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி நடக்கிறது.
இவ்வாறு, கூறினார்.
பேரூராட்சி நிர்வாக்தினர் கூறுகையில், 'கிணத்துக்கடவில், நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்படுகிறது. இறந்தவர்களின் சடலத்தை புதைப்பது குறைந்து கொண்டே வருகிறது. அதற்கேற்ப தொலைநோக்குடன் திட்டமிட்டு இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. இது மட்டுமின்றி உடல் அடக்கம் செய்யவும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது,' என்றனர்.