/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதிய ஆட்டோவில் காஸ் கசிவு; இழப்பீடு வழங்க உத்தரவு
/
புதிய ஆட்டோவில் காஸ் கசிவு; இழப்பீடு வழங்க உத்தரவு
புதிய ஆட்டோவில் காஸ் கசிவு; இழப்பீடு வழங்க உத்தரவு
புதிய ஆட்டோவில் காஸ் கசிவு; இழப்பீடு வழங்க உத்தரவு
ADDED : டிச 07, 2024 06:28 AM
கோவை; புதிதாக வாங்கிய ஆட்டோவில், காஸ் கசிவு ஏற்பட்டதால், இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
கோவை அருகேயுள்ள சோமையம்பாளையத்தை சேர்ந்த மதன்குமார, 2022, அக்., 27 ல், கவுண்டம்பாளையத்திலுள்ள கே.பி.எஸ்., ஆட்டோ ஏஜென்சி வாயிலாக, பியாஜோ சி.என்.சி., ஆட்டோ வாங்கினார்.
ஆட்டோவை ஓட்டி பார்த்த போது, காஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டது. இது குறித்து புகார் அளித்த போது, முதல் சர்வீஸ் செய்யும் போது பழுது நீக்கி தருவதாக தெரிவித்தனர். அதன்படி சர்வீஸ் செய்த பிறகும், அதே கோளாறு ஏற்பட்டதால் ஆட்டோவை திரும்ப பெற்று, பணத்தை தருமாறு கேட்ட போது மறுத்தனர்.
இதனால் இழப்பீடு கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், 'எதிர்மனுதாரர்கள் சேவை குறைபாடு செய்துள்ளதால், மனுதாரருக்கு, 35,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.