/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விபத்துக்கு வழிவகுக்கும் கேட் வால்வு; வாகன ஓட்டுநர்கள் அச்சம்
/
விபத்துக்கு வழிவகுக்கும் கேட் வால்வு; வாகன ஓட்டுநர்கள் அச்சம்
விபத்துக்கு வழிவகுக்கும் கேட் வால்வு; வாகன ஓட்டுநர்கள் அச்சம்
விபத்துக்கு வழிவகுக்கும் கேட் வால்வு; வாகன ஓட்டுநர்கள் அச்சம்
ADDED : அக் 28, 2025 01:00 AM

விபத்து அபாயம் பொள்ளாச்சி, பாலக்காடு செல்லும் வழியில், போலீஸ் ஸ்டேஷன் எதிரே ரோட்டின் நடுவில் தண்ணீர் குழாய் கேட் வால்வு அச்சுறுத்தலாக உள்ளது. அப்பகுதியில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேர வாகன ஓட்டுநர்கள் இவ்வழியாக செல்லும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதை சீரமைக்க வேண்டும்.
-- பிரபு: ரோட்டோர குப்பை பொள்ளாச்சி, ரங்கசமுத்திரம் பக்கோதிபாளையம் ரோட்டின் ஓரத்தில் அதிக அளவில் குப்பை கொட்டப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதை ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் உடனடியாக அகற்றம் செய்ய வேண்டும்.
- - மூகாம்பிகை: குப்பையை அகற்றுங்க! கிணத்துக்கடவு வி.ஏ.ஓ. அலுவலகம் அருகே அதிகளவில் குப்பை கொட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதை பேரூராட்சி நிர்வாகத்தினர் கவனித்து, குப்பையை அகற்ற வேண்டும்.
- - பிரவீன்: குறுக்குப்பட்டை தொல்லை பொள்ளாச்சி - பல்லடம் ரோட்டில், நெகமம் பகுதியில் தொடர் குறுக்குப்பட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டுநர்கள் தடுமாறுகின்றனர். எனவே, வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி, குறுக்கு பட்டை தடிமனை குறைக்க வேண்டும் அல்லது அதற்கு பதிலாக வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- ராஜ்குமார்: விரைந்து முடியுங்க! உடுமலை நகராட்சி குமரன் லே-அவுட்டில் தரை பாலம் கட்டும்பணி பாதியிலேயே நிற்கிறது. இதனால், வாகன ஓட்டுனர்கள் செல்ல முடிவதில்லை. எனவே, இப்பணியை நகராட்சியினர் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- குமார்: மழைநீர் தேக்கம் தேசிய நெடுஞ்சாலையில், பழநி ரோட்டில் காணப்படும் பள்ளத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த பள்ளத்தை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கந்தசாமி: ஆக்கிரமிப்பால் இடையூறு உடுமலை கல்பனா ரோட்டில் தள்ளுவண்டிகள், கடைகளின் ஆக்கிரமிப்புகள் காணப்படுகின்றன. இதனால், வாகன ஓட்டுனர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, அந்த ரோட்டிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சங்கர்: பாலத்தை சீரமைக்கணும் மடத்துக்குளம் அமராவதி ஆற்றுப்பாலத்தில் தடுப்புச்சுவர் சேதமடைந்து விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பாலத்திற்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பாலத்தை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- முருகன்: பஸ் ஸ்டாண்ட் தேவை உடுமலை குமரலிங்கத்தில் பஸ் நிறுத்தம் மட்டுமே உள்ளது. இங்கு பழநியிலிருந்தும், உடுமலையிலிருந்து டவுன் பஸ்கள், புறநகர் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அங்கு பஸ்கள் நிறுத்த இடமில்லாததால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, அங்கு பஸ் ஸ்டாண்ட் அமைக்க பேரூராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- முனுசாமி: குப்பையை அகற்றணும் தேசிய நெடுஞ்சாலையில், உடுமலை பழநி ரோட்டின் ஓரங்களில் குப்பை வீசப்படுகின்றன. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. நோய்கள் பரவவும் வாய்ப்புள்ளது. எனவே, குப்பை கொட்டுவோர் மீது நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- காமராஜ்: குடிநீர் குழாய் சேதம் பொள்ளாச்சி, திருவள்ளுவர் திடலில் ரோட்டின் நடுவே குழாய் சேதமடைந்து அதிகளவு தண்ணீர் ரோட்டில் வழிந்து ஓடுகிறது. இப்பிரச்னை ஒரு மாதமாக உள்ளது. இதனால் ரோட்டில் செல்லும் வாகன ஓட்டுனர்கள் பாதிக்கின்றனர். ரோடும் சேதமடைகிறது. இதை நகராட்சி நிர்வாகத்தினர் கவனித்து குழாயில் நீர் கசிவை சரி செய்ய வேண்டும்.
- - வரதராஜ்:

