/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜி.சி.டி., கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
/
ஜி.சி.டி., கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ADDED : ஜன 22, 2025 11:26 PM

பெ.நா.பாளையம்,; துடியலூர் அருகே தனியார் ஓட்டலில் ஜி.சி.டி., கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, 40 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்தது.
கோவையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரி (ஜி.சி.டி.,) முதல், நான்கு ஆண்டுகள் பிரிவில், கடந்த, 1980 முதல், 84 வரை சிவில் இன்ஜினியரிங் பிரிவு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில், முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த கல்லூரிக்கு நேரடியாக சென்று, தங்களுடைய கல்லூரி கால அனுபவங்களை ஒருவருடன் ஒருவர் பகிர்ந்து கொண்டனர். பின்னர் ஓட்டலில் நடந்த சந்திப்பு நிகழ்ச்சியில், முன்னாள் மாணவர் ஒவ்வொருவரும், தங்களுடைய குடும்ப உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்தனர். தாங்கள் எழுதிய கவிதைகளை வாசித்தனர். பாடல் பாடியும், நடனமாடியும் மகிழ்ந்தனர்.
விளையாட்டு போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன.

