/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எறிபந்து போட்டியில் கீதாஞ்சலி பள்ளி சாம்பியன்
/
எறிபந்து போட்டியில் கீதாஞ்சலி பள்ளி சாம்பியன்
ADDED : அக் 30, 2025 12:16 AM

கோவை: கீதாஞ்சலி பப்ளிக் பள்ளி சார்பில் மாணவியருக்கான 44வது கோவை சஹோதயா எறிபந்து போட்டி நடந்தது. சி.பி.எஸ்.இ., பள்ளிகளைச் சேர்ந்த, 128 வீரர்கள் அடங்கிய 86 அணிகள் இரண்டு நாள் நிகழ்வுகளில் போட்டியிட்டனர். பட்டய கணக்காளர்கள் அமைப்பின் முன்னாள் இந்திய தலைவர் ராமசாமி தலைமை வகித்து, போட்டிகளைத் துவக்கி வைத்தார்.
கீதாஞ்சலி பப்ளிக் பள்ளி 12 மற்றும் 16 வயதுக்கு உட்பட்டோர் பிரிவுகளில் சாம்பியனாக வெற்றி பெற்றது. ஹனி பன்ச் சீனியர் செகண்டரி பள்ளி 14 வயது பிரிவிலும், நேசனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளி 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவிலும் வெற்றி பெற்றன.
முன்னாள் கடற்படை துணை தலைவர் ரியர் அட்மிரல் தாஸ் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி கவுரவித்தார். மாணவர்கள் சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.கீதாஞ்சலி கல்வி நிறுவனங்களின் தலைவர் அழகிரிசாமி, கீதாஞ்சலி பப்ளிக் பள்ளி முதல்வர் கவிதா, ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

