/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதல்வர் கோப்பை போட்டி: கற்பகம் பல்கலைக்கு தங்கம்
/
முதல்வர் கோப்பை போட்டி: கற்பகம் பல்கலைக்கு தங்கம்
ADDED : அக் 30, 2025 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: முதல்வர் கோப்பை மாநில போட்டியில், கற்பகம் பல்கலை மாணவர்கள் தங்கப்பதக்கம் பெற்றனர் .
சென்னை, தமிழ்நாடு விளையாட்டு பல்கலையில், முதல்வர் கோப்பை மாநில விளையாட்டு போட்டிகள், சமீபத்தில் நடத்தப்பட்டன. சிலம்பம் போட்டியில், கோவை கற்பகம் பல்கலை மாணவர்கள் பங்கேற்றனர். 65 கிலோ எடை பிரிவில் சஞ்சய், 60 கிலோ எடை பிரிவில் அபிநயா ஆகியோர் தங்கம் வென்றனர்.
கபடியில், கவுதம், கபிலன், சுரேந்திரன், ஜெனிஸ்டன், புவனேஸ்வரன், மதுபாலன், சிவனேஷ், அக்ஷய் ஆகியோர் தங்கப்பதக்கம் பெற்றனர். இவர்களை பல்கலை துணைவேந்தர் ரவி, பதிவாளர் பிரதீப், உடற்கல்வித்துறை இயக்குனர் சுதாகர் ஆகியோர் பாராட்டினர்.

