/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில அளவிலான கராத்தே: கோவை வீரர்கள் பங்கேற்பு
/
மாநில அளவிலான கராத்தே: கோவை வீரர்கள் பங்கேற்பு
ADDED : அக் 30, 2025 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: இந்திய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில், மாநில அளவிலான கராத்தே போட்டி, ஈரோட்டில் நாளை நடக்கிறது.
14 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியருக்கு நடத்தப்படும் இப்போட்டியில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வீரர்கள், வீராங்கனையர் பங்கேற்க உள்ளனர். மாணவியருக்கு நாளையும், மாணவர்களுக்கு நவ. 1ம் தேதியும் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
கோவை மாவட்டத்தில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். மாநில போட்டியில் வெற்றி பெறும் வீரர்கள், தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர். அதில் வெற்றி பெறும் பட்சத்தில், கோப்பை, ரொக்கம் பரிசாக வழங்கப்படும்.

