/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கீதாதான் 2026 விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
கீதாதான் 2026 விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜன 23, 2026 05:07 AM
கோவை: இஸ்கான் சார்பில் “கீதாதான் 2026” பள்ளி மாணவர்களுக்கான, விழிப்புணர்வு நிகழ்ச்சி நாளை நடக்கிறது.
பகவத் கீதையின் வாழ்வியல் கருத்துக்கள், இன்றைய சமுதாயத்துக்கு பொருத்தமானதாக இருக்கும் என்பதை எடுத்துரைக்கும் நோக்கில் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை இஸ்கான் நடத்தி வருகிறது.
இந்த ஆண்டு “கீதாதான் - 2026” இறுதி நிகழ்ச்சி, நாளை (ஜன.24) சிங்காநல்லுார் சாய்விவாஹா மஹாலில் காலை 9:30 மணிக்கு நடக்கிறது. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்கின்றனர். ஓவியம் மற்றும் போஸ்டர் வரைதல், வினாடி--வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. அனைத்து மாணவர்களுக்கும் “கீதா கிட்” வழங் கப்படும்.

