/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜெலட்டின் வெடிமருந்து கடத்தல்: முக்கிய குற்றவாளி கைது
/
ஜெலட்டின் வெடிமருந்து கடத்தல்: முக்கிய குற்றவாளி கைது
ஜெலட்டின் வெடிமருந்து கடத்தல்: முக்கிய குற்றவாளி கைது
ஜெலட்டின் வெடிமருந்து கடத்தல்: முக்கிய குற்றவாளி கைது
ADDED : ஆக 29, 2025 12:45 AM
போத்தனூர்; கேரளாவிற்கு ஜெலட்டின் வெடிமருந்து குச்சிகள் கடத்திய வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்ட தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.ஐ., ஜோஸப்பிற்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் கடந்த, 26ல் கேரளாவிற்கு கடத்தி செல்ல மினி சரக்கு வாகனத்தில் (பொலேரோ பிக்-அப்) கொண்டு வரப்பட்ட, 15 ஆயிரம் ஜெலட்டின் வெடி மருந்து குச்சிகள் (1.875 கி.கிராம்), மதுக்கரை - எட்டிமடை சாலை, அல்பாரி ஓட்டலின் அருகே பிடிபட்டது.
கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த டிரைவர் சுபைர், 41 கைது செய்யப்பட்டார். விசாரணையில், தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி தாலுகா, பள்ளிபட்டியை சேர்ந்த பச்சமுத்து மகன் கார்த்திக், 38, வெடிமருந்துகளை கடத்தி வர கூறியதும், அவருடன் சாந்தகுமார், ஷபி ஆகிய இருவர் பாதுகாப்பாக காரில் வழிகாட்டியாக சென்றதும் தெரிந்தது.
இதையடுத்து போலீசார் கார்த்திக் உள்ளிட்ட மூவரையும் தீவிரமாக தேடினர். இதில் நேற்று முன்தினம் கார்த்திக் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பின் நேற்று மதுக்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து போலீசார் மற்ற இருவரையும் தேடுகின்றனர்.