/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அமெரிக்காவின் வரி உயர்வு; செப். 5ல் கம்யூ. ஆர்ப்பாட்டம்
/
அமெரிக்காவின் வரி உயர்வு; செப். 5ல் கம்யூ. ஆர்ப்பாட்டம்
அமெரிக்காவின் வரி உயர்வு; செப். 5ல் கம்யூ. ஆர்ப்பாட்டம்
அமெரிக்காவின் வரி உயர்வு; செப். 5ல் கம்யூ. ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 29, 2025 12:43 AM
கோவை; இந்திய கம்யூ., - மார்க்சிஸ்ட் கம்யூ., மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், கோவை இ.கம்யூ., மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாநில பொருளாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் வந்தபின், விசாவை காரணம் காட்டி, அங்குள்ள இந்தியர்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறார். இந்தியாவுக்கு எதிரான வர்த்தக நடவடிக்கையை துவக்கியுள்ளது. இந்தியாவில் தொழில்கள் மற்றும் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு மிகப் பெரிய அளவில் பாதிப்படையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான இத்தகைய வர்த்தக நடவடிக்கையை கண்டித்து, உக்கடம் வள்ளியம்மாள் பேக்கரி அருகில் செப்., 5ல் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இ.கம்யூ., மாவட்ட செயலாளர் சிவசாமி, மா.கம்யூ., மாவட்ட செயலாளர் பத்மநாபன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கோவை குமணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.