ADDED : ஆக 29, 2025 12:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; தமிழகத்தின், 10 மாவட்டங்களில் மழை பொழிவு இருக்கும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. நேற்று முன்தினம் இரவு 1 மணிக்கு மேல் கோவையின் பல்வேறு பகுதிகளிலும் சாரல் மழை இருந்தது.
நேற்று காலை முதல் மிதமான மழைப்பொழிவு இருந்தது. உக்கடம், சிங்காநல்லுார், காந்திபுரம், ரயில்வே ஸ்டேஷன், டவுன்ஹால் ராமநாதபுரம், பீளமேடு, கணபதி, சரவணம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. புறநகர் பகுதிகளான தொண்டாமுத்துார், பேரூர், சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளிலும் மழைப் பொழிவு இருந்தது. மாலையில், கணபதி, காளப்பட்டி, காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் மழைப்பொழிவு இருந்தது.
பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது. மழையுடன் குளிரும் நிலவியது. மழை பொழிவால், நகரில் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.