/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மார்பக புற்றுநோய் சிகிச்சைக்கு 'ஜெம் பிரஸ்ட் சென்டர்' துவக்கம்
/
மார்பக புற்றுநோய் சிகிச்சைக்கு 'ஜெம் பிரஸ்ட் சென்டர்' துவக்கம்
மார்பக புற்றுநோய் சிகிச்சைக்கு 'ஜெம் பிரஸ்ட் சென்டர்' துவக்கம்
மார்பக புற்றுநோய் சிகிச்சைக்கு 'ஜெம் பிரஸ்ட் சென்டர்' துவக்கம்
ADDED : அக் 07, 2025 01:23 AM

கோவை:மார்பக புற்றுநோய் சிகிச்சைக்கான பிரத்யேக மையமாக, 'ஜெம் பிரஸ்ட் சென்டர்' நேற்று துவங்கப்பட்டது.
புதிய மையத்தை துவக்கி வைத்த, பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராம் கூறுகையில், ''பெண்கள் ஆண்டுக்கு ஒரு முறை பரிசோதனை செய்வது அவசியம். சமூகத்தில் பல விஷயங்கள் மாறியுள்ளன.
''பெற்றோருக்கு இல்லாத பல நோய்கள், நமக்கு வர வாய்ப்புள்ளது. மார்பக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்தால் குணப்படுத்தலாம்,'' என்றார்.
ஜெம் மருத்துவமனை தலைவர் டாக்டர் பழனிவேலு கூறுகையில், ''ஜெம் ப்ரெஸ்ட் சென்டரின் மூலம் மார்பகம் தொடர்பான, அனைத்து பிரச்னைகளுக்கும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்ட, ஆதாரபூர்வமான, கனிவான சிகிச்சையை வழங்க, நாங்கள் இலக்கு வைத்திருக்கிறோம்,'' என்றார்.
நிகழ்ச்சியில், மருத்துவமனை இணை நிர்வாக இயக்குனர் டாக்டர் பிரவீன்ராஜ், கல்வி இயக்குனர் டாக்டர் மது சாய்ராம், கதிரியக்க நிபுணர் மற்றும் மார்பக ஆலோசகர் பிரேமா, புற்றுநோயியல் அறுவை சிகிச்சை துறை தலைவர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.