/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கருப்பை புற்றுநோய் சிகிச்சையில் ஜெம் புற்றுநோய் மையம் சாதனை
/
கருப்பை புற்றுநோய் சிகிச்சையில் ஜெம் புற்றுநோய் மையம் சாதனை
கருப்பை புற்றுநோய் சிகிச்சையில் ஜெம் புற்றுநோய் மையம் சாதனை
கருப்பை புற்றுநோய் சிகிச்சையில் ஜெம் புற்றுநோய் மையம் சாதனை
ADDED : டிச 31, 2025 05:08 AM

கோவை: இந்தியாவில் முதன்முறை யாக, கோவை ஜெம் புற்றுநோய் மையம், கர்ப்பப்பை புற்றுநோய்க்கு லேப்ராஸ்கோபிக் முறையில். அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளது.
இது குறித்து நிருபர்களிடம், ஜெம் மருத்துவமனை தலைவர் டாக்டர் பழனிவேலு கூறியதாவது:
பெரிட்டோனியல் கார்சினோ மாட்டோசிஸ் என்பது குடல், வயிறு மற்றும் கர்ப்பப்பை போன்ற வயிற்றுப் பகுதியில் ஏற்படும் புற்று நோய். இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றத்தால், இந்நோய்க்கு, லேபராஸ்கோபிக் முறையில் சிகிச்சை செய்ய முடிகிறது.
ப்ளூரசென்ஸ் தொழில்நுட்பம் மூலம் புற்றுநோய் திசுக்கள் ஒளிர்வதால், லேபரஸ்கோபிக் மற்றும் ரோபோட்டிக் அறுவை சிகிச்சைகளில் துல்லியமாக கண்டறிந்து அகற்ற முடிகிறது. குறைந்த வலி, குறைந்த ரத்த இழப்பே ஏற்படும். குறைந்த நாட்கள் மருத்துவமனையில் தங்கினால் போதும். கோவை ஜெம் மருத்துவமனை புற்று நோய் மையத்தில், புற்றுநோய்க்கு சைட்டோரெடக்டிவ் சர்ஜரி மற்றும் ஹைபர்தெர்மிக் இன்ட்ராபெரிட்டோனியல் கீமோதெரபி முறையில், இந்தியாவில் முதல் முறையாக வெற்றிகரமான சிகிச்சை அளித்து, டாக்டர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.
மகப்பேறு புற்றுநோய் நிபுணர்கள் கவிதா, சாய் தர்ஷினி, புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் சிவகுமார், ஈசோபேகோ காஸ்ட்ரிக் புற்றுநோய்கள் சிகிச்சை டாக்டர் பார்த்தசாரதி, கோலோரெக்டல் புற்றுநோய்கள் சிகிச்சை டாக்டர் ராஜபாண்டியன் மற்றும் டாக்டர்கள் அருள் முருகன், பரத் ரங்கராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

