/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குறிச்சி குளத்தில் வீசப்படும் குப்பையால் பாழாகிறது நீர் நிலை செம்மொழி பூங்காவுக்கு காட்டும் அக்கறை...நீர் நிலைகளை காப்பாற்றுவதிலும் வேண்டும்

ADDED : டிச 31, 2025 05:07 AM

கோவை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேம்படுத்தப்பட்ட குறிச்சி குளத்தில், கழிவு நீர் கலப்பதால் ஆகாயத் தாமரை படர்ந்து வருகிறது. பின்புற கரையில் குப்பை கொட்டப்படுகிறது. அதனால், குளத்து நீர் மாசடைந்து வருகிறது.
'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், கோவை மாநகராட்சி சார்பில் ஒன்பது குளங்கள் மேம்படுத்தியதில் குறிச்சியும் ஒன்று. 50 கோடி ரூபாய் வரை செலவிட்டு பல்வேறு பணிகள் செய்யப்பட்டன.
குளத்தின் பின்புறப் பகுதிகள் குடியிருப்புகள் நிறைந்ததாக இருக்கிறது. சுற்றுவட்டாரத்தில் வசிப்பவர்கள் குப்பையை குளக்கரையில் வீசுகின்றனர். கழிவுகள் ஆங்காங்கே குவியல் குவியல்களாக கொட்டப்பட்டு உள்ளன. மாடுகளும் கட்டப்பட்டிருக்கின்றன. மாநகராட்சி எல்லையை ஆக்கிரமித்து சிலர், வீட்டை விஸ்தரிப்பு செய்திருக்கின்றனர். கரையை சுற்றியுள்ள பகுதிகள் புதர்மண்டி காணப்படுகின்றன.
குளத்துக்குள் நேரடியாக கழிவு நீர் கலப்பதால், ஆகாயத் தாமரை படர்ந்திருக்கிறது. இக்குளத்தை பராமரிக்க மாநகராட்சி ஆர்வம் காட்டுவதில்லை. காலை, மாலை நடைபயிற்சி செல்வோர் முகம் சுளிக்கும் அளவுக்கு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டிருக்கிறது. செம்மொழி பூங்காவை உருவாக்கவும், பராமரிக்கவும் அதீத அக்கறை காட்டி வரும் மாநகராட்சி அதிகாரிகள், கோடிக்கணக்கில் செலவிட்டு உருவாக்கப்பட்ட, 'ஸ்மார்ட் சிட்டி' குளங்களையும் தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.
நீர் நிலைகள் மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து, ஆகாயத்தாமரை படராமலும், குப்பை கொட்டுவதை தடுக்கவும், துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.