/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திறந்தது பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல்! வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலம்
/
திறந்தது பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல்! வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலம்
திறந்தது பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல்! வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலம்
திறந்தது பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல்! வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலம்
ADDED : டிச 31, 2025 05:07 AM

கோவை: வைகுண்ட ஏகாதசியையொட்டி, கோவையிலுள்ள பெருமாள் கோயில்களில், நேற்று சொர்க்கவாசலை கடந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பெருமாளை, பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
நேற்று ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக பெருமாள் சேஷ வாகனத்தில் எழுந்தருளி சொர்க்கவாசலை கடந்து, பெருமாள் பக்தர்களுக்கு சேவை சாதித்தார். அடுத்தடுத்த நாட்களில் பெருமாள் வெவ்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி அருள்பாலிப்பார்.
பத்து நாட்கள் நம்மாழ்வார் பாசுரங்கள் பாராயணம் செய்யப்படும். நிறைவாக நம்மாழ்வாருக்கு பெருமாள் மோட்சம் அருளும் நிகழ்ச்சியுடன், உற்சவம் நிறைவடையும். இது, வைகுண்டம் என்றழைக்கப்படும் சொர்க்கத்துக்கு செல்லும் பாதையை, பக்தர்களுக்கு உணர்த்தும் விழாவாகும்.
ராம்நகர் கோதண்டராமர் தேவஸ்தானத்தில், நேற்று காலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சீதா, லட்சுமண ஹனுமத் சமேத ஸ்ரீ கோதண்டராமர் சேஷ வாகனத்தில் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க, சொர்க்கவாசலை கடந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பாப்பநாயக்கன் பாளையம் சீனிவாசபெருமாள், ஜெகன்நாத பெருமாள், சுந்தராஜ பெருமாள், ஆவாரம்பாளையம் ருக்மிணி சத்யபாமா சமேத வேணுகோபாலசுவாமி கோயில், பெரியகடைவீதி லட்சுமிநாராயண வேணுகோபாலசுவாமி (கெரடிகோயில்), சலிவன்வீதி வேணுகோபாலசுவாமி, உக்கடம் லட்சுமி நரசிம்மர், கோட்டை கரிவரதராஜ பெருமாள், சிங்காநல்லூர் உலகளந்த பெருமாள், பீளமேடு கரிவரதராஜ பெருமாள், உப்பிலிபாளையம் வரதராஜ பெருமாள், பாப்பநாயக்கன்புதுார் கோதண்டராமர், கோவைப்புதுார் கல்யாணவெங்கட்ரமணசுவாமி, தொண்டாமுத்துார் ரங்கநாதசுவாமி, பரமேஸ்வரன்பாளையம் கொங்கு திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோயில்களில், சொர்க்க வாசல் திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

