/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தாத்தா அறிவித்த பாலத்தை திறந்து வைத்தார் பேரன்
/
தாத்தா அறிவித்த பாலத்தை திறந்து வைத்தார் பேரன்
ADDED : டிச 31, 2025 05:06 AM

கோவை: ஒண்டிப்புதுாரில் இருந்து எஸ்.ஐ.எச்.எஸ். காலனிக்கு செல்ல, ரயில்வே மேம்பாலம் கட்டும் திட்டத்தை, 2010ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார். 2011ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் கிடப்பில் போடப்பட்டது. இரு ஆண்டுகள் கழித்து, கட்டுமான பணி, மாநில நெடுஞ்சாலைத்துறையால் துவக்கப்பட்டது.
அணுகு சாலைக்கு போதிய இடம் ஒதுக்காமல், 30 அடி அகலத்துக்கு பாலம் கட்ட ஆரம்பித்ததால், அப்பகுதி மக்கள், வழக்கு போட்டனர்.
வழக்கு ஆண்டுக்கணக்கில் இழுத்ததால், தீர்வு காண முடியாமல் நெடுஞ்சாலைத்துறையினர் திணறினர். 2021ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு ரூ.29.37 கோடி ஒதுக்கப்பட்டது. மொத்தம் ரூ.55.40 கோடி செலவழித்து, மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது.
இப்பாலத்தை, துணை முதல்வர் உதயநிதி, ஆர்.எஸ்.புரத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 42 ஆயிரம் மக்கள் பயன்பெறுவர்.

