/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஜெம்' போர்டல்; நடைமுறைச் சிக்கல்களை களைய கோவை தொழில்துறையினர் கோரிக்கை
/
'ஜெம்' போர்டல்; நடைமுறைச் சிக்கல்களை களைய கோவை தொழில்துறையினர் கோரிக்கை
'ஜெம்' போர்டல்; நடைமுறைச் சிக்கல்களை களைய கோவை தொழில்துறையினர் கோரிக்கை
'ஜெம்' போர்டல்; நடைமுறைச் சிக்கல்களை களைய கோவை தொழில்துறையினர் கோரிக்கை
ADDED : மார் 17, 2025 06:23 AM
கோவை; அரசுத் துறைகளுக்கான டெண்டரில் பங்கேற்க, 'ஜெம்' போர்டலில் பதிவதற்கான, நடைமுறைச் சிக்கல்களைக் களைய வேண்டுமென, தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரு விற்பனையாளர் தனது தயாரிப்பு அல்லது சேவையை, அரசு நிறுவனங்களுக்கு விற்க விரும்பினால், அவர்கள் அரசு மின்னணு சந்தை என்ற, 'ஜெம்' இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
ஆனால், இதில் பதிவு செய்வதற்கும், பதிவு செய்தபின் டெண்டரில் பங்கேற்கவும், நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாக, தொழில்முனைவோர் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக, தொழில்முனைவோர் கூறியதாவது:
'ஜெம்' தளத்தில் பதிவு செய்ய, விற்பனையாளரை மதிப்பிடுவதற்கான 'வெண்டார் அசெஸ்மென்ட்'டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழகத்தில் இருந்து பதிவு செய்வதாலோ என்னவோ, பல வாரங்களாக, திரும்பத் திரும்ப ஒரே ஆவணங்களைக் கேட்கின்றனர். ஒவ்வொரு முறையும், தேவையில்லாத ஆவணங்களைக் கேட்கின்றனர்.
பான், ஆதார் போன்ற சில ஆவணங்களை, ஒருங்கிணைப்பதிலும் சிக்கல் உள்ளது.
இந்த இணையதளம், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டும் உள்ளது.
ஆன்லைனில் அனைவருக்கும் விண்ணப்பிக்கத் தெரிவதில்லை. தமிழிலும் இந்த இணையதளம் செயல்பட்டால், விண்ணப்பிக்க எளிதாக இருக்கும்.
குறு, சிறு தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், இந்த தளம் செயல்பட வேண்டும். ஆனால், பெரு நிறுவனங்கள் எளிதில், குறைந்த ஏலம் என்ற அடிப்படையில், எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளி விடுகின்றன.
எனவே, எம்.எஸ்.எம்.இ., துறைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
நாம் இங்கு தயாரிக்கும் அதே பொருளை, வட மாநில நிறுவனங்கள் பல மடங்கு கூடுதல் விலைக்கு, ஜெம் தளம் வாயிலாக ஒப்பந்தத்தில் பங்கேற்கின்றனர்.
கோவை தொழில்முனைவோர் பங்கேற்றால் எளிதில் ஒப்பந்தங்களைப் பெற முடியும். ஆனால், இதுபோன்ற நடைமுறைச் சிக்கல்களால், பதிவு செய்வதே சிரமமாக உள்ளது.
எனவே, தமிழக தொழில்முனைவோருக்கு இந்தத் தளத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்து, விரிவான பயிற்சி அளிக்க வேண்டும்.
இவ்வாறு, தொழில்முனைவோர் தெரிவித்தனர்.