/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு
/
ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு
ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு
ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு
ADDED : ஜூலை 22, 2025 10:46 PM

கோவை; கோவை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின்கீழ் பணிபுரியும், ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு, நேற்று துவங்கியது.
ராஜவீதியில் உள்ள துணி வணிகர் சங்க அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், கலந்தாய்வு நடந்து வருகிறது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி தலைமையில் நடந்த, கலந்தாய்வின் முதல் நாளில், மாவட்டத்திற்குள்ளான இடமாறுதல் நடைபெற்றது.
மாவட்டத்தில் பணிபுரியும், 28 ஆசிரியர் பயிற்றுநர்கள் இடமாறுதலுக்காக விண்ணப்பித்திருந்தனர். இவர்களில், 2 மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட, மொத்தம் 13 பேர் இடமாறுதல் பெற்றுள்ளனர்.
இன்று, மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு நடைபெறுவதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.