/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பொதுமருத்துவ முகாம்
/
ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பொதுமருத்துவ முகாம்
ADDED : பிப் 12, 2024 08:38 PM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், பொது மருத்துவ முகாம் நடந்தது.
பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், தேசிய பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு, தினமும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதன் தொடர்ச்சியாக நேற்று வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் ராமு பாலிகிளினிக் சார்பில், பொது மருத்துவ முகாம் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது.
மோட்டார் வாகன ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்ட முதன்மை டிராபிக் வார்டன் கமலக்கண்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
அதில், ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. டிரைவர்கள், லைசென்ஸ் எடுக்க வந்தோர் என, 200க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு அதிகமாக உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு டாக்டர்கள், மருத்துவ அறிவுரைகளை வழங்கினர்.