/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தபால் அலுவலகங்களில் பொதுபரிவர்த்தனை நிறுத்தம்
/
தபால் அலுவலகங்களில் பொதுபரிவர்த்தனை நிறுத்தம்
ADDED : ஜூலை 31, 2025 09:51 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி கோட்டத்தில் உள்ள தபால் அலுவலகங்களில், நாளை மற்றும் நாளை மறுநாள், புதிய சாப்ட்வேர் மாற்றத்தை முன்னிட்டு, பொதுபரிவர்த்தனை நடைபெறாது என, அறிவிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி தபால் கோட்ட கண்காணிப்பாளர் சாந்தினிபேகம் அறிக்கை: தபால்துறையில் ஐ.டி., 2.O சாப்ட்வேர் மேம்படுத்தப்பட்டு நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்படுகிறது.
அதன்படி, பொள்ளாச்சி கோட்டத்தில் உள்ள, 2 தலைமை தபால் அலுவலகங்கள், 42 துணை அலுவலகங்கள், 164 கிளை அலுவலகங்களில் இந்த சாப்ட்வேர் பயன்பாடு, வரும் 4ம் தேதி செயல்பாட்டுக்கு வருகிறது.
இதன்வாயிலாக, பல முன்னேற்றமான டிஜிட்டல் சேவைகள் கொண்டு வரப்படுகிறது. மேம்படுத்தபட்ட சாப்ட்வேர் தடையின்றி செயல்படுத்துவதற்காக பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக, அனைத்து தபால் அலுவலகங்களிலும், நாளை 2ம் தேதி மற்றும் நாளை மறுநாள் 3ம் தேதி பொதுபரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட மாட்டாது.
தரவு இடம்பெயர்வு, அமைப்பு சரிபார்ப்பு மற்றும் உள்ளமைவு செயல்முறைகளை எளிதாக்குவதற்கும், புதிய அமைப்பு சீராகவும் திறமையாக செயல்படுவதை உறுதி செய்வதற்கும் இந்த தற்காலிக சேவை இடை நிறுத்தம் அவசியம். பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.