/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொது தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
பொது தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 28, 2026 08:16 AM

உடுமலை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, உடுமலை தாலுகா பொது தொழிலாளர் சங்கத்தினர் உடுமலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உடுமலை தொழிலாளர் உதவி ஆய்வாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சி.ஐ.டி.யு., ரங்கநாதன் தலைமை வகித்தார். டெய்லர் சங்க செயலாளர் ரத்தினசாமி, மாற்றுத்திறனாளி சங்க தலைவர் மாலினி முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர்துறை அதிகாரிகள் நலவாரிய ஆன்லைன் பதிவுகளை தன்னிச்சையாக நீக்குவதை கண்டித்து கோஷமிட்டனர்.
மேலும், நலவாரிய பணப்பலன்கள் மற்றும்ஓய்வூதிய பலன்களை தொழிலாளர்களுக்கு வழங்காமல் இழுத்தடிப்பதைக்கண்டித்தும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், முறையாக நலவாரிய பணப்பலன்களை வழங்கவும் வலியுறுத்தப்பட்டது.
கட்டுமானசங்க செயலாளர் கனகராஜ், சி.ஐ.டி.யு., மாவட்ட துணைச்செயலாளர் ஜெகதீசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

