/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பள்ளிகளுக்கு 'பட்டம்' ஆண்டு சந்தா வழங்கி தாராளம்
/
அரசு பள்ளிகளுக்கு 'பட்டம்' ஆண்டு சந்தா வழங்கி தாராளம்
அரசு பள்ளிகளுக்கு 'பட்டம்' ஆண்டு சந்தா வழங்கி தாராளம்
அரசு பள்ளிகளுக்கு 'பட்டம்' ஆண்டு சந்தா வழங்கி தாராளம்
ADDED : ஜூலை 06, 2025 11:53 PM

கோவை; ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்துார் மான்செஸ்டர் சங்கம் சார்பில், அரசு பள்ளி மாணவர்கள், 100 பேருக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது.
கோவையில் ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்துார் மான்செஸ்டர் சங்கத்தின், 25வது ஆண்டை முன்னிட்டு, வெள்ளி விழா நிகழ்ச்சி, பீளமேட்டில் உள்ள கோஇண்டியா அரங்கில் நடந்தது. ரோட்டரி மாவட்ட கவர்னர் மாருதி தலைமை வகித்தார். கிளப்பின் புதிய தலைவராக ரமேஷ், செயலாளராக துரை ஆகியோர் பொறுப்பேற்றனர்.
விழாவில் அரசு பள்ளியில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 படிக்கும் மாணவர்கள், 100 பேருக்கு மடிக்கணினியும், இரண்டு கல்லுாரி மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகையும், ஒன்பது அரசு பள்ளிகளுக்கு 'தினமலர்' பட்டம் இதழ் ஆண்டு சந்தா மற்றும் சிறந்த ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
ரோட்டரி கிளப் மான்செஸ்டர் புதிய தலைவர் ரமேஷ் கூறுகையில், ''கடந்த ஆண்டு கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மருத்துவ செலவுக்கு, 37 லட்சம் ரூபாய் கொடுத்து உதவி இருக்கிறோம். இந்த ஆண்டு 50 குழந்தைகளுக்கு மருத்துவ உதவி வழங்க இருக்கிறோம். மக்கள் மத்தியில் சுற்றுச்சூழல் மற்றும் பொதுநலன் சார்ந்து, 50 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த இந்த ஆண்டு திட்டமிட்டு இருக்கிறோம்,'' என்றார்.
சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் வரதராஜன், சதாசிவம், மகேஷ்குமார், ரகுராமன் மற்றும் சுபசித்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.