மரபியல் செயற்கை நுண்ணறிவு மாநாடுபாரதியார் பல்கலையில் துவங்கியது
மரபியல் செயற்கை நுண்ணறிவு மாநாடுபாரதியார் பல்கலையில் துவங்கியது
ADDED : ஜன 30, 2026 05:06 AM
கோவை: மரபியல் மற்றும் மருந்து கண்டுபிடிப்புக்கான செயற்கை நுண்ணறிவு தொடர்பான சர்வதேச மாநாடு பாரதியார் பல்கலையில் துவங்கியது.
பாரதியார் பல்கலை பதிவாளர் ராஜவேல் தலைமை வகித்து பேசியதாவது: செயற்கை நுண்ணறிவு, மரபியல், உயிர் தகவலியல் மற்றும் மருந்து கண்டுபிடிப்பு போன்ற வளர்ந்து வரும் துறைகளில் பல்துறை ஆராய்ச்சி மிக முக்கியம்.
ஆராய்ச்சி, புதுமை மற்றும் உலகளாவிய கல்வி ஒத்துழைப்புகளை பாரதியார் பல்கலை ஊக்குவித்து வருகிறது.
ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கும் ஊக்கம், நிர்வாக ஆதரவு, தெளிவான கல்வி வழிகாட்டல் ஆராய்ச்சி சாதனைகளை உருவாக்க முக்கிய பங்கு வகிக்கின்றன. இவ்வாறு பதிவாளர் பேசினார்.
அரவிந்த் மருத்துவ ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் தர்மலிங்கம், டெல்லி எய்ம்ஸ் முன்னாள் பேராசிரியர் டி.பி.சிங், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற உறுப்பினர் செயலாளர் வேல்முருகன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நாளை ஜன.30ல் மாநாடு முடிகிறது.
