ADDED : டிச 18, 2024 09:03 PM
கோவை; வேளாண் பல்கலை, தாவர உயிரித் தொழில்நுட்பத் துறையில், 'மரபணுத் தொகை அடிப்படையில் பயிர்பெருக்கம்' என்ற தலைப்பில், இரண்டு நாள் பயிற்சி நடந்தது.
கோவை வேளாண் பல்கலை, கேரள வேளாண் பல்கலை, எஸ்.ஆர்.எம்., பல்கலை, அம்ரிதா பல்கலை, குமரகுரு வேளாண் கல்லூரி, ஜெ.எஸ்.ஏ., வேளாண் கல்லூரி மற்றும் பல நிறுவனங்களில் இருந்து உதவி பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
பயிர் மேம்பாட்டிற்காக மரபணுத் தொகை உதவி இனப்பெருக்கம் குறித்து விளக்கப்பட்டது.
க்யூடிஎல் மேப்பிங், ஐ.சி.ஐ.எம் மற்றும் ஜி.டபிள்யூ.ஏ.எஸ்.,க்கான டாஸெல் மற்றும் 3கே நெல் பேனலில் ஹாப்லோடு பகுப்பாய்வு போன்ற மென்பொருள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
உயிரி தொழில்நுட்ப மைய இயக்குநர் செந்தில், தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர்தகவலியல் துறை தலைவர் அருள், தாவர இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மைய இயக்குநர் ரவிகேசவன், உதவிப் பேராசிரியர் ராஜன்பாபு, இணைப் பேராசிரியர் கீதாஞ்சலி உட்பட பலர் பங்கேற்றனர்.
