/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மரபணுத்தொகை தரவு பகுப்பாய்வு கைத்திறன் பயிற்சி
/
மரபணுத்தொகை தரவு பகுப்பாய்வு கைத்திறன் பயிற்சி
ADDED : அக் 23, 2024 11:25 PM
கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர் தகவலியல் துறை சார்பில், மரபணுத் தொகை தரவுப் பகுப்பாய்வு கைத்திறன் பயிற்சி நடந்து வருகிறது.
பயிற்சி திட்டத்தின் நோக்கம் மற்றும் என்.ஜி.எஸ்., நுட்பங்களின் முக்கியத்துவம் குறித்து, துறைத் தலைவர் அருள் குறிப்பிட்டார்.
கிடைக்கக் கூடிய ஏராளமான மரபணு தரவு மற்றும் புதிய மரபணுத் தொகை தரவு வரிசை முறை தொழில்நுட்பங்கள் மற்றும் தொடர்புடைய சிறு குறிப்புகளை கற்றுக் கொள்வதன் முக்கியத்தும் குறித்து, முனைவர் செந்தில்குமார் வலியுறுத்தினார்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம், குமரகுரு வேளாண் நிறுவனம், கோழிக்கோடு பிராவிடன்ஸ் மகளிர் கல்லுாரி உட்பட, நாடு முழுவதும் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களை சேர்ந்த, மாணவர்கள் பங்கேற்றனர். தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர் தகவலியல் துறை உதவி பேராசிரியர் ஜெயகாந்தன் நன்றி கூறினார்.