தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஜி.எச்.,ல் உடற்கூறு ஆய்வு உதவியாளர் இல்லை; பிரேத பரிசோதனை மேற்கொள்வதில் சிக்கல்

ஜி.எச்.,ல் உடற்கூறு ஆய்வு உதவியாளர் இல்லை; பிரேத பரிசோதனை மேற்கொள்வதில் சிக்கல்

ஜி.எச்.,ல் உடற்கூறு ஆய்வு உதவியாளர் இல்லை; பிரேத பரிசோதனை மேற்கொள்வதில் சிக்கல்


ADDED : டிச 19, 2024 11:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 19, 2024 11:33 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வால்பாறை; வால்பாறை அரசு மருத்துவமனையில், பிரேத பரிசோதனை செய்ய உடற்கூறு ஆய்வு உதவியாளர் இல்லாததால், சிக்கல் ஏற்படுகிறது, என, நோயாளிகள் நலச்சங்க கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

வால்பாறை தாலுகா அலுவலகத்தில் நோயாளிகள் நலச்சங்க கூட்டம், பொள்ளாச்சி சப்-கலெக்டர் கேத்ரின் சரண்யா தலைமையில் நடந்தது. கூட்டத்துக்கு, நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, தாசில்தார் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் நித்யா வரவேற்றார்.

கூட்டத்தில், நோயாளிகள் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பேசியதாவது:

வால்பாறை அரசு மருத்துவமனையில், 12 டாக்டர்கள் பணிபுரிய வேண்டிய இடத்தில், நான்கு டாக்டர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். பல்வேறு எஸ்டேட் பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் தான் அதிக அளவில் சிகிச்சைக்கு வருகின்றனர்.

வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிரந்தரமாக டாக்டர் இல்லாததால், நோயாளிகள், அரசு மருத்துவமனையை மட்டுமே நம்பியுள்ளனர். இங்கும் குறைவான டாக்டர்களே பணியில் உள்ளதால் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடிவதில்லை.

மேலும், விபத்து மற்றும் தற்கொலை சம்பவங்களில் உயிழப்பவரின் உடலை, பிரேத பரிசோதனை செய்ய உடற்கூறு ஆய்வு உதவியாளர் கூட, வால்பாறை அரசு மருத்துவமனையில் இல்லை. ஒவ்வொரு முறையும் பிரேத பரிசோதனை செய்ய, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் இருந்து உடற்கூறு ஆய்வு உதவியாளர் வரவேண்டிய நிலை உள்ளது.

வால்பாறை அரசு மருத்துவமனையில் நோயாளிகள் சிகிச்சை பெற வசதியாக, காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

இவ்வாறு, பேசினர்.

சப்-கலெக்டர் பேசும் போது, ''வால்பாறையில் வசிக்கும் மக்களின் நலன் கருதியும், மனித - வனவிலங்கு மோதல் சம்பவத்தில் படுகாயமடைபவர்களுக்கு உடனடியாக உயிர்காக்கும் சிகிச்சை அளிக்க, அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

எஸ்டேட் பகுதியில் உள்ள மருந்துவமனைகளில், தொழிலாளர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும். அரசு மருத்துவமனைக்கு கூடுதல் யு.பி.எஸ்., நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு நிலவும் அனைத்து பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us