/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு பரிசு
/
பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு பரிசு
ADDED : மார் 31, 2025 09:53 PM

- நிருபர் குழு -
குடிமங்கலம் ஒன்றியம் எஸ்.வல்லகுண்டாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. விழாவில், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ஜெயந்தி முன்னிலை வகித்தார். முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மவுனகுருசாமி, குமாரசாமி தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் மனோகரன் வரவேற்றார்.
புதிய கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு நடந்தது. கடந்த கல்வியாண்டில் கல்வியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
ஆண்டுவிழாவையொட்டி நடந்த போட்டிகளில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள், கோப்பைகள் வழங்கப்பட்டன. வசவநாயக்கன்பட்டி தனியார் கம்பெனியின் சார்பில், பள்ளிக்கு மைக் செட், குழந்தைகளுக்கான சேர், டேபிள்கள் வழங்கப்பட்டன. ஆசிரியர் அருண்ராமகிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.
* உடுமலை, லிங்கமாவூர் அரசு பழங்குடியினர் உண்டுஉறைவிடப்பள்ளியில், ஆண்டு விழா நடந்தது. முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதி திருமலைச்சாமி தலைமை வகித்தார். ஆலயம் கல்வி நிறுவன முதல்வர் சிவக்குமார், கலிலியோ அறிவியல் கழக துணைத் தலைவர் சதீஸ்குமார், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் ரோசன்சேக் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து மாணவர்களுக்கான மாறுவேடப்போட்டி நடந்தது. மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர் கார்த்திகேயன் நன்றி தெரிவித்தார்.
* வால்பாறை அடுத்துள்ள உருளிக்கல் எஸ்டேட் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், ஆண்டு விழா, விளையாட்டு விழா, பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) வசந்தகுமார் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் முருகேஸ்வரி, ஆசிரியர் உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டதாரி ஆசிரியர் கார்த்திகேயன் வரவேற்றார்.
விழாவில், பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு, கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டிகள், மிமிக்கிரி, நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு தலைமை ஆசிரியர் பரிசு வழங்கினார்.