/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கர்டர்' அமைக்கும் பணி; ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்
/
'கர்டர்' அமைக்கும் பணி; ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்
'கர்டர்' அமைக்கும் பணி; ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்
'கர்டர்' அமைக்கும் பணி; ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்
ADDED : ஜூலை 08, 2025 10:08 PM
கோவை; அவிநாசி ரோட்டில் மேம்பாலத்துக்கான கர்டர் அமைக்கும் பணிகள் நடக்க உள்ளதால், ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அவிநாசி ரோட்டில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை, 12 கி.மீ., துாரத்துக்கு மேம்பாலம் கட்டப்படுகிறது. ஹோப் காலேஜ் பகுதியில் ரயில்வே மேம்பாலத்தில், 52 மீட்டர் நீளத்துக்கு இரும்பு கர்டர் பொருத்த வேண்டும்.
இப்பணிகளின் ஒரு பகுதியாக, பீளமேடு பகுதியில் ரயில்வே பாதைக்கு நடுவே செல்லும் பாலத்தில் கர்டர் அமைக்கும் பணிகள் நடக்க உள்ளன. பணிகள் தடையின்றி நடக்க ஏதுவாக, ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, திருவனந்தபுரம் - மைசூரு(16316), கன்னியாகுமரி - திப்ருகர் (22503), கன்னியாகுமரி - ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கத்ரா(16317), எர்ணாகுளம் - பாட்னா(22669) ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்கள், நாளை முதல் வரும், 13ம் தேதி வரை, போத்தனுார் - இருகூர் வழியாக ரயில்கள் இயக்கப்படும். இந்த ரயில்கள் போத்தனுாரில் நின்று செல்லும்.
காரைக்கால் - எர்ணாகுளம்(16187), சென்னை சென்ட்ரல் - மேட்டுப்பாளையம்(12671), விசாகப்பட்டினம் - கொல்லம்(18567), ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்கள், நாளை முதல் வரும், 13 ம் தேதி வரை, போத்தனுார் - இருகூர் வழியாக ரயில்கள் இயக்கப்படும். குறிப்பிட்ட நாட்களில் இந்த ரயில்கள் போத்தனுாரில் நின்று செல்லும்.