/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீக்காயங்களுடன் சிறுமி மருத்துவமனையில் அனுமதி; கணவரிடம் போலீசார் விசாரணை

ADDED : ஜன 16, 2025 11:42 PM
கோவை; உடலில் 80 சதவீதம் தீக்காயங்களுடன் 14 வயது சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடர்பாக சிறுமியின் கணவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
பீகார் மாநிலம், பாட்னாவை சேர்ந்தவர் ஹரேந்தர் குமார், 19. இவருக்கும் பாட்னாவை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். இருவரும், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் கோவை வந்தனர். சுந்தராபுரம், எம்.ஜி.ஆர்., நகரில் வாடகை வீடு எடுத்து தங்கி, கட்டட வேலைக்கு சென்று வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் சிறுமி உடலில் 80 சதவீதம் தீக்காயங்களுடன் கோவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக சுந்தராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் ஹரேந்தர் குமாரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, நேற்று முன்தினம் இரவு, சிறுமி மண்ணெண்னை அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்த போது, சேலையில் தீப்பற்றியதாக தெரிவித்தார். மேலும், இவர் சென்று தீயை அணைப்பதற்குள் தீ உடல் முழுவதும் பரவியதாக ஹரேந்தர் குமார் போலீசில் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து, சிறுமிக்கு குழந்தை திருமணம் செய்தது குறித்தும் தீவிபத்துக்கு வேறு எதுவும் காரணங்கள் உள்ளதா எனவும் விசாரிக்கின்றனர்.