/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காட்டுப்பன்றி தாக்கி சிறுமி காயம்
/
காட்டுப்பன்றி தாக்கி சிறுமி காயம்
ADDED : ஆக 18, 2025 08:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே காட்டுப்பன்றி தாக்கியதில் சிறுமி காயமடைந்தார்.
வேலுாரை சேர்ந்த அண்ணாமலை, பூவலப்பருத்தியில் குடும்பத்துடன் தங்கி பல ஆண்டுகளாக செங்கல் சூளைகளில் வேலை பார்த்து வருகிறார். இவரது, 16வயது மகள், ரெட்டியாரூர் பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். இந்நிலையில், வீட்டின் முன்பாக நின்றிருந்த சிறுமியை, காட்டுப்பன்றி தாக்கியது. இதை கண்ட, சிறுமியின் தந்தை சப்தம் போடதும் காட்டுப்பன்றி ஓடியது.
காயமடைந்த சிறுமியை மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இது குறித்து வனத்துறை மற்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.