/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விபத்தில் பெண் பலி: வாலிபருக்கு சிறை
/
விபத்தில் பெண் பலி: வாலிபருக்கு சிறை
ADDED : பிப் 04, 2024 12:23 AM
கோவை:கோவை பேரூரை சேர்ந்தவர் சுகுமார், 26. இவர் கடந்த, 28.8.2016 அன்று அவினாசி ரோடு பழைய மில்ரோட்டில் உள்ள ஒரு வங்கி அருகே காரில் வேகமாக சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு முன் சென்ற பைக் மீது பயங்கரமாக மோதினார். அதில் பைக்கை ஓட்டி வந்த நாகராஜ், அவரது மனைவி வனஜா, 63, ஆகியோர் துாக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த வனஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காயமடைந்த நாகராஜை அங்கிருந்தவர்கள் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து கோவை மாநகர மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.
இது தொடர்பான வழக்கு கோவை ஜே.எம். கோர்ட்டு-, 8ல் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தனலட்சுமி, விபத்தை ஏற்படுத்திய சுகுமாருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் சரவணன் ஆஜராகி வாதாடினார்.